
ஹாலிவுட் நிறுவனங்கள் எங்கெங்கு பணம் புழங்குதோ அங்கெல்லாம் கடை விரிக்கும். அப்படிதான் டுவென்டின்த் செஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ முருகதாஸுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தை தயாரித்தது. இதே கூட்டணி தற்போது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது.
இந்தப்பட நிறுவனம் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண தயாராகி வருகிறது. எடுத்தப் படங்களெல்லாம் கடும் நஷ்டத்தை ஏற்படுத்த தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தினார் ஷங்கர். ஆனாலும் நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் பொங்கிய பாலாக இன்னும் அடங்கவில்லை.
இம்சை அரசன் இரண்டாம் பாகம், ராஜு முருகன் இயக்கும் படம் என பல படங்களை தயாரிக்கும் மூடில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் பாக்ஸ் டுடியோவின் ஆஃபர் அவர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறது. இரண்டு பேர் சேர்ந்தால் நஷ்டமானாலும் பாதிப்பாதி என்பதால் விரைவில் புதிய கூட்டணியை தமிழ் சினிமா எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment