Thursday, May, 24, 2012
சென்னை::இரு இசை அமைப்பாளர்கள் இடையே நடக்கும் மோதலை பற்றிய கதையை இயக்கி நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இது பற்றி அவர் கூறியதாவது: தெலுங்கு படம் இயக்கச் சென்றதால் கோலிவுட்டில் இடைவெளி ஏற்பட்டது. தற்போது ‘இசை என்ற படத்தை இயக்குகிறேன். இரு இசை அமைப்பாளர்களின் மோதல் கதை. இது நிஜ கதையா என்கிறார்கள். கற்பனை கதைதான். திரைப்பட இசை அமைப்பாளராக நான் நடிக்கிறேன். போட்டி இசை அமைப்பாளராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஹீரோயினாக சாவித்ரி என்பவர் அறிமுகமாகிறார். கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நிறைய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சில இயக்குனர்களும் நடிக்க உள்ளனர். வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றுக்கு கரீனா கபூரை நடிக்க கேட்டிருக்கிறேன். ஏற்கனவே இந்தியில் நான் இயக்கிய குஷி பட ரீமேக்கில் அவர் நடித்தார். இப்படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பு ஏற்றதால் கடந்த 5 மாதமாக 5 மாஸ்டர்களிடம் கீபோர்ட், பியானோ, கிடார் கற்றதுடன் அதன் நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டேன். என்னால் இசை அமைக்க முடியும் என்று நம்பிக்கை ஊட்டியவர் ஏ.ஆர்.ரகுமான்தான். தயாரிப்பு எஸ்.விக்டர்ராஜ். ஒளிப்பதிவு சவுந்தர்ராஜன்.

Comments
Post a Comment