Monday, ,May, 21, 2012
புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் ரஜினிகாந்த் மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புதுக்கோட்டை தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமான், தே.மு.தி.க. சார்பில் ஜாகீர் உசேன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர சில சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மாவட்ட ரஜினிகாந்த் மன்ற செயலாளர் ஸ்ரீதர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீதர் கூறுகையில், 1983ஆம் ஆண்டு முதல் ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ளேன். 1998 முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறேன்.
ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் மூலம் நாங்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளதால் மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தயக்கம் காட்டுகிறார்.
அவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கை காட்டுவதற்காக நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இது நாங்களாக எடுத்த முடிவு. ஆனாலும் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். தற்போதைய எதிர்க்கட்சியை விட நாங்கள் அதிக ஓட்டு பெறுவோம் என்றார்

Comments
Post a Comment