
அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சின¤மாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவர், அஜீத்துக்கு ஜோடி. இப்பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்க¤டையே கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே உபேந்திராவுடன் சூப்பர் கன்னட படத்தில் நயன்தாரா நடித்தார். அப்படத்துக்காக அவருக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. கன்னட சினிமாவில் பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஒரே நடிகை என்ற பெருமையும் நயன்தாராவுக்கு கிடைத்தது.
இதையடுத்து இப்போது வாய்ப்பு வந்துள்ள சுதீப் படத்துக்காகவும் நயன்தாராவுக்கு பெரிய தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. கால்ஷீட் கூட குறைவான நாட்கள்தான். ஆனால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நயன். காரணம், அஜீத் படம். அடுத்த மாதம் முதல் அஜீத் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாலும் அடுத்தடுத்த மாதங்களில் அப்பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாலும் இம்முடிவை எடுத்துள்ளார். இது பற்றி நயன் தரப்பினர் கூறும்போது, கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால் சுதீப் படத்தில் நடிக்கவில்லை. சம்பளத்தைவிட கொடுத்த வாக்குறுதிதான் நயன்தாராவுக்கு முக்கியம். அஜீத் படத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டார். அதை மாற்றிக் கொள்ள மாட்டார் என்றனர்.
Comments
Post a Comment