நான்கு பேரும் மூன்று காதலும்!!!

Thursday, ,May, 17, 2012
தான் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைத்களங்களை தேர்வு செய்பவர் இயக்குனர் வஸந்த்.

'கேளடி கண்மணி','நீ பாதி நான் பாதி', 'நேருக்கு நேர்', 'ஆசை','அப்பு', 'ரிதம்', 'ஏய் நீ ரொம்ப அழகே இருக்கே', 'சத்தம் போடாதே' ஆகிய படங்கள் இதற்கு சான்று.

'சத்தம் போடாதே' படத்தினைத் தொடர்ந்து தற்போது அர்ஜுன், சேரன், விமல் என மூன்று நாயகர்களை ஒன்றிணைத்து 'மூன்று பேர் மூன்று காதல்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் வஸந்த்.

தேசிய விருது வென்ற நான்கு பேர் இப்படத்தில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்து இருக்கிறது.

'வெற்றிக் கொடி கட்டு', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்ற சேரன், 'மைனா' படத்திற்காக தேசிய விருது வென்ற தம்பி ராமையா, 'அழகர்சாமியின் குதிரை' படத்திற்காக தேசிய விருது வென்ற அப்புக்குட்டி, இந்த மூவருடன் இணைந்திருக்கிறார் இயக்குனர் வஸந்த்.

2005ம் ஆண்டு 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற குறும்படத்திற்காக தேசிய விருது வென்றார் இயக்குனர் வஸந்த்.

இந்த நான்கு பேரும் 'மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

Comments