
தனுஷின் பொல்லாதவன் படத்திற்காக காத்திருந்தது இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமல்ல, தயாரிப்பாளர் கதிரேசனும்தான். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணிக்காக இவரும் பல மாதங்கள் காத்திருந்தார். பொல்லாதவன் ஒரு நல்ல இயக்குனரையும், ஒரு நல்ல தயாரிப்பாளரையும் தந்தது.
மீண்டும் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சற்குணம் இயக்குகிறார். தனுஷ் ஹீரோ. சற்குணம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் இல்லை பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் இறுதியில் தேர்வு செய்யப்பட்டவர் தனுஷ்.
சீரியஸாக எடுத்த வாகை சூட வா ஓடாத காரணத்தால் களவாணி போன்ற எளிமையான காமெடி சப்ஜெக்டை இந்தமுறை முயற்சி செய்கிறார் சற்குணம்.
Comments
Post a Comment