

தனிக்குடித்தனம் போகும் முன், கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுள்ளனர் பிரசன்னாவும் சினேகாவும்.
கரூர் மாவட்டம் மகாதானபுரம் அருகே உள்ள பொய்யாமணி கிராமம்தான் பிரசன்னாவின் பூர்வீகம். இவரது தாய் வழி குலதெய்வ கோவிலான செல்லாண்டி அம்மன் கோவில் மாயனூரில் மதுக்கரை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
நடிகர் பிரசன்னா குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வாராம். முக்கிய காரியங்கள் செய்யும் முன் இங்கு வருவது அவர் வழக்கமாம்.
தற்போது திருமணம் முடிந்த கையோடு இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் பிரசன்னா, தனது பெற்றோர், சகோதரர் மற்றும் மனைவி சினேகாவுடன் கோவிலுக்கு வந்தார்.
மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலிலும் அவர்கள் தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு சென்னை திரும்பினர். அப்புறம்தான் தனிக்குடித்தனம் போனார்களாம்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்தக் கோயிலுக்குப் போய் வந்தபிறகுதான் நான் எந்த விஷயத்தையும் தொடங்குவேன். அது ரொம்ப நாள் சென்டிமென்ட். இப்போதும் நானும் சினேகாவும் எங்கள் வாழ்க்கையை எங்கள் குல தெய்வ ஆசியுடன் தொடங்குகிறோம்," என்றார்.
Comments
Post a Comment