
ரஜினி, கமல் இணைந்து நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் நினைத்தாலே இனிக்கும். கதாநாயகியாக ஜெயப் பிரதா நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம், சிவ சம்போ சிவ சம்போ, நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
அந்த படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய், அஜித் ஆகியோர் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.
நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கை செல்வா இயக்க உள்ளதாகவும் செய்தி பரவியது. செல்வா ஏற்கனவே அமராவதி படம் மூலம் அஜித்தை அறிமுகம் செய்தவர். ஜெமினி கணேசனின் நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது.
இதையடுத்து நினைத்தாலே இனிக்கும் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் அஜித்தையும் விஜய்யையும் சந்தித்து இது குறித்து பேசி உள்ளதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
ஆனால் செல்வாவிடம் இதுகுறித்து கேட்டபோது மறுத்தார். நினைத்தாலே இனிக்கும் படத்தில் விஜய், அஜித்தை நடிக்க வைக்க நான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்தி வதந்திதான். அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார்.
Comments
Post a Comment