
3 படத்தை இயக்கியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், இந்திய திரைப்பட விழா நடந்தது. அந்த விழாவில், ஐஸ்வர்யா இயக்கிய '3' படம் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக, ஐஸ்வர்யா அமெரிக்கா சென்றிருந்தார்.
விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
பின்னர், நியூயார்க்கில் உள்ள தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டார்.
தமிழ் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி பேசும்போது, ஐஸ்வர்யா தனுசின் எளிமையையும், படைப்பாற்றலையும் பாராட்டினார். ஐஸ்வர்யா தனுஷ், மிக சிறந்த பரத நாட்டிய கலைஞர் என்றும், அதற்காக அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
விழாவின் இறுதியில், ஐஸ்வர்யா தனுசுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment