'அவிழ்ப்பு ராணி' பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கலைந்தது!!!

Wednesday,May,02,2012
தனது ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால், ஓவர் நைட்டில் உச்சாணிக்குப் போன பூனம் பாண்டேவின் பாலிவுட் கனவு கிட்டத்தட்ட வெடித்துச் சிதறி விட்டதாம். அமீத் சக்சேனாவின் இயக்கத்தில் பூனம் பாண்டே நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவரது வாயாலேயே இந்த வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு விட்டாராம் பூனம் பாண்டே.

நம்ம வீரர்கள் மட்டும் கோப்பையை வெல்லட்டும், நிர்வாணமாக ஓடுகிறேன் என்று ட்விட்டர் மூலம் பெட் கட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பிரளயத்தை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அந்த ஸ்டேட்மென்ட்டுக்கு முன்பு வரை பூனம் எப்படி இருப்பார் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அந்த அறிவிப்புக்குப் பின்னர் பூனம் இப்படியெல்லாமா இருப்பார் என்று அத்தனை பேரும் பேசும் அளவுக்கு தன்னையும், தனது உடலையும் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வருகிறார் பூனம்.

இந்த நிலையில் 21 வயதான பூனம், இந்தியில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதையும் கூட இவரேதான் தொடர்ந்து பரப்பி வந்தார். ஜிஸ்ம் படத்தை இயக்கியவரான அமீத் சக்சேனாவின் புதிய படத்தில் பூனம் நடிக்கப் போவதாகவும், படு கவர்ச்சியாக அதில் அவர் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கூறின.

ஆனால் அது பொய்யான தகவல் என்று அமீத்தே தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் பூனம் இதுபோல பொய்யான கதைகளை சொல்வதை நிறுத்த வேண்டும்.

இது மோசமானது. நான் இதுவரை எதையுமே முடிவு செய்யவில்லை. எனவே பூனம் குறித்து நான் கருத்துக் கூற முடியாது என்றார்.

மொத்தத்தில் பூனத்தின் பாலிவுட் அறிமுகம் அவரது வாயாலேயே கெட்டுப் போய் விட்டது என்று கூறுகிறார்கள்.

Comments