'கோ' படத்தில் நடித்த நடிகை காஜலை வெப்சைட்டில் விபசார அழகியாக சித்தரித்த கும்பல்!!!

Sunday, ,May, ,27, 2012
சென்னை::'கோ' படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக நடித்திருப்பவர் நடிகை காஜல். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற பெயரும் உண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளிலும் நடித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகையானவர். இந்நிலையில் இவரை விபசார அழகியாக சித்தரித்து ஒரு கும்பல் வெப்சைட்டில் காஜலின் போட்டோவை வெளியிட்டுள்ளது.

'அதில், கால் கேர்ள்' என குறிப்பிடப்பட்டு காஜலின் செல்போன் நம்பர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்து பலர் போன் செய்து செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். பலர் காஜலின் செல்போனில் ஆபாசமாகவும் பேசி உள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் ஒருவர் பேசினார். உங்கள் போட்டோவை வெப்சைட்டில் பார்த்தேன் என்று கூறி அசிங்கமாக பேசினார். எனது செல்போனுக்கு பலர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

செல்போனில் தொல்லை அதிகரித்ததால் எனது செல்போன் எண்ணை மாற்றும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதன் காரணமாக நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே எனது போட்டோவை வெப்சைட்டில் வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் காஜல் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments