தமிழகம் பிச்சை கேட்கிறது என கமென்ட், சென்னையை விட்டு தன்யா ஓட்டம் :மன்னிப்பும் கேட்டார்!!!

Tuesday, ,May, 29, 2012
தமிழகம் தண்ணீர், மின்சாரத்துக்காக பிச்சை கேட்டது. கொடுத்தோம் என்று கிண்டல் செய்த நடிகை தன்யாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார். சென்னை வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். ‘காதலில் சொதப்புவது எப்படிÕ, ‘7ஆம் அறிவுÕ படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் இவர் எழுதும்போது, ‘கர்நாடகத்திடம் தமிழகம் தண்ணீர் பிச்சை கேட்டது கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டது கொடுத்தோம். ஐபிஎல் போட்டியில் கருணை பிச்சை கேட்டது கொடுத்தோம். தமிழ் திரையுலகினர் வாய்ப்பு பிச்சை கேட்டால் தருவோம்ÕÕ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த கருத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியது. தன்யாவின் டுவிட்டர் பக்கத்தில் அவரை கடுமையாக விமர்சித்தும், திட்டியும் பலர் பதில் அனுப்பினார்கள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார் தன்யா. தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். சென்னையில் தோழிகளுடன் தங்கி இருந்த அவர், இப்பிரச்னையால் உடனடியாக அறையை காலி செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டு சென்றார். இது பற்றி தன்யா டுவிட்டரில் குறிப்பிட்டபோது, Ô‘எனக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கிறேன்ÕÕ என்றார். இப்பிரச்னையை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு அவர் முழுக்கு போட்டுள்ளார்.

பிச்சை கேட்கும் தமிழகம்... நடிகை கமென்ட்டுக்கு எதிர்ப்பு!!!

முதலில் தண்ணீர் பிசசை கேட்டார்கள், பிறகு மின்சாரம். அதையெல்லாம் கொடுத்தோம். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கருணை பிச்சை கேட்டார்கள். அதையும் கொடுத்தோம் என ஏளனமாக தமிழகத்தை பற்றி கமென்ட் அடித்திருக்கிறார் நடிகை தன்யா.
காதலில் சொதப்புவது எப்படி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமா மூலம்தான் நடிகையாக இவர் அறிமுகமானார். இவர் இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் தமிழகத்தை சாடியிருப்பதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

டியர் சென்னை... நீங்கள் குடிக்க தண்ணீர் பிச்சை கேட்டீர்கள். நாங்கள் கொடுத்தோம். மின்சாரம் பிச்சை கேட்டீர்கள். அதையும் நாங்கள் கொடுத்தோம். ட்வென்ட்டி 20 கிரிக்கெட் போட்டியில் ‘பிளே ஆப் போட்டிக்கு போவதற்கும் எங்களது கருணை தேவைப்பட்டது. விட்டுக்கொடுத்தோம். நீங்கள் (தமிழ் திரையுலகினர்) சினிமா வாய்ப்பையும் பிச்சை கேட்டால் அதையும் தருவோம். இவ்வாறு தன்யா கூறியிருக்கிறார்.
கிண்டல் செய்வது போல், திமிர் பிடித்த இவரது கமென்ட் தமிழ் திரையுலம், சினிமா ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களையும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. சிலரின் தூண்டுதல் பேரில் தன்யா இதுபோல் கூறியிருக்கிறார். தன்யாவின் பேச்சுக்கு தமிழகத்தில் சினிமா மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Comments