கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு மகளுடன் செல்லும் ஐஸ்!!!

Sunday, ,May, ,13, 2012
சென்னை::கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழா வரும் 16ம் தேதி பிரான்சில் துவங்குகிறது. இதி்ல் பிரசவத்திற்கு பிறகு கேமராக்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஐஸ்வர்யா ராய் இதுவரை உலகின் பார்வைக்கு காட்டாமல் வைத்திருக்கும் தனது 6 மாத குழந்தை ஆரத்யாவுடன் கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப்புடையது. பிரபல அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்வது இது 11வது முறையாகும்.

மேலும் அதே லாரியலின் இன்னொரு பிராண்ட் அம்பாசிடரான சோனம் கபூரும் கேன்ஸ் விழாவில் கலந்துகொள்கிறார். இவர்கள் தவிர பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல், அவரது மனைவி மெஹர் ஜெசியா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

பிரசவத்திற்கு பிறகு ஓவர் வெயிட் போட்டுவிட்டார் என்று கூறப்படும் ஐஸ் கலந்து கொள்ளும் முதல் விழா இது. ஒவ்வொரு முறை கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ளும்போதும் அவரது உடை மற்றும் சிகை அலங்காரம் சரியில்லை என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. இந்த முறையாவது ஐஸ் நச்சுன்னு வருவாரா?

Comments