மனச ரிலாக்ஸா வச்சிக்கிட்டா என்றும் இளமை தான்! - நதியா!!!

Monday, May, 07, 2012
1980களில ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை நதியா. டைரக்டர் பாசிலின் பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நதியா தொடர்ந்து பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னதம்பி பெரியதம்பி, அன்புள்ள அப்பா, பூமழை பொழியுது உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். 4வருடம் சினிமாவில் இருந்த நதியா பல வெற்றி படங்களை கொடுத்தவர், நடித்து கொண்டிருக்கும்‌போதே வங்கி அதிகாரியாக இருந்த தனது குடும்ப நண்பரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் போய் செட்டில் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவியின் அம்மாவாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா தினமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ...

தமிழ் சினிமாவில் நான் நடித்த சில படங்கள் பக்கத்து வீட்டு பெண் போன்ற ரோலில் தான் அதிகம் நடித்தேன். நிறைய ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள். பல பாடல்கள் சூப்பர் ஹிட். குறிப்பா என்னுடைய ஸ்டைல் ரொம்ப பேசப்பட்டது. ஆனா, நான் ரொம்ப சாதாரணமா ஒரு டிரஸ் போட்டு கொண்டாலும் அது எல்லோருக்கும் பிடிச்சது. ரோட்டில் விற்பனையான குறைந்த விலையில் உள்ள பிளாஸ்டிக் தோடுகளை தான் அதிகம் அணிந்தேன். ஆனா அது கூட ஒரு ஸ்டைலாச்சு. இப்போது எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த பெண் சனம்(15), 2வது பெண் ஜனா(11). இப்போ நாங்க மும்பையில் இருக்கோம். இரண்டு பேரும் என்னை அப்படி வேலை வாங்குவாங்க. விளையாட்டு, மியூசிக் என்று எல்லா கிளாஸ்க்கும் நான் தான் அழைத்து போகணும். என் குழந்தைகளுக்கு சுத்தமா சினிமா ஆர்வம் கிடையாது.

என் கணவருக்கு நான் பாதியில் நடிப்பை விட்டுட்டு கல்யாணம் பண்ணியது கொஞ்சம் வருத்தம். அதனால் தான் இப்பவும் என்னை நடிக்க சொல்லுவார். அதனால் தான் சில படங்களில் நடித்து வருகிறேன். எல்லோரும் நான் இன்னும் அப்படியே இளமையா இருக்கேன் என்று சொல்றாங்க. நாம எந்தளவு உணவு உட்கொள்கிறமோ, அந்தளவுக்கு உடற்பயிற்சியும் அவசியம். மனச எப்பவும் ரிலாக்ஸா வச்சிக்கணும். அது போதும் எத்தனை வருஷம் ஆனாலும் எல்லோரும் இ‌ளமையாக இருக்கலாம் என்று சொல்லி முடித்த நதியா, அடுத்து தெலுங்கில் தன்னுடைய படம் ஒன்று ரிலீஸ் ஆக இருப்பதாக கூறினார்

Comments