சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும் -திரிஷா!!!

Wednesday,May,16,2012
.பி.எல். கிரிக்கெட் ஜுரம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நடிகர்-நடிகைகளையும் அதுவிட்டு வைக்கவில்லை. படப்பிடிப்பு இடைவேளையில் நண்பர்களுக்கு போன் போட்டு ஸ்கோர் கேட்ட வண்ணம் உள்ளனர்.

நடிகை திரிஷாவோ தெண்டுல்கர் கிரிக்கெட் பேட் ஒன்று திடீரென தனக்கு கிடைத்ததாக மகிழ்ச்சியில் குதிக்கிறார். தனியார் நிறுவனம் ஒன்று முக்கிய பிரமுகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை அனுப்பியுள்ளது. திரிஷாவுக்கும் அந்த பேட் வந்துள்ளது. இது குறித்து திரிஷா கூறியதாவது:-

சச்சின் தெண்டுல்கர் விளம்பர தூதராக உள்ள நிறுவனம் ஒன்று அவர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை வாங்கி முக்கிய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. எனக்கும் வந்துள்ளது. இது மறக்க முடியாத பரிசு.

நான் கிரிக்கெட் ரசிகை அல்ல. ஆனால் சச்சின் தெண்டுல்கரை எனக்கு பிடிக்கும். அவர் அற்புதமான மனிதர். நாகரீகம் தெரிந்தவர். சில பிரபலங்களை நமக்கு பிடிக்கும். ஏன் என்று சொல்ல தெரியாது. அதுபோல் சச்சின் மேல் எனக்கு பற்று உள்ளது.

Comments