Thursday, ,May, 24, 2012
உடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்ததாக வந்த தகவலை மறுத்துள்ளார் ஹன்சிகா. இது குறித்து அவர் கூறியது: திடீரென எனது உடல் எடை கூடிவிட்டது. இதனால் அவதிப்பட்டேன். எடையை குறைக்க முடிவு செய்தேன். இதற்காக கடுமையாக டயட் இருந்தேன். உடற்பயிற்சி தவறாமல் செய்தேன். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இதில் பள்ளி மாணவி வேடம். அதனால் எடையை குறைக்க வேண்டும் என இயக்குனர் ஹரி சொல்லிவிட்டார். அதே நேரம், ஒல்லிகுச்சி நடிகையானால் இந்தி சினிமாவில் ஜமாய்க்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருந்தால்தான் வாய்ப்பு வரும். அதே நேரம், ஓவர் குண்டாகிவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள். நிறைய பேர் அதை சுட்டிக்காட்டினார்கள். அதனால்தான் எடையை குறைத்தேன்.
ஆர்யாவுடன் சேட்டை படத்தில் நடித்து வருகிறேன். இப்பட செட்டில் என்னை பார்ததவர்கள், ஆச்சரியம் அடைந்தனர். ஆபரேஷன் மூலம் எடையை குறைத்ததாக சிலர் கதை கட்டுகிறார்கள். அதற்கெல்லாம் அவசியமே கிடையாது. எடையை குறைத்தாலும் எனது பப்ளி லுக் மாறிவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தேன். சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் என்னை பார்த¢த மாணவன், ரசகுல்லா என அழைத்தார். இது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

Comments
Post a Comment