அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார்?!!!

Tuesday, ,May, 22, 2012
கார்த்தியை ஹீரோவாக வைத்து சுராஜ், இயக்கி வரும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. இப்படத்தின் அனுஷ்கா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக அனுஷ்கா மூன்று செட்யூலாகப் பிரித்து கால்ஷீட் கொடுத்திருந்தாராம். முதல் கட்ட படப்பிடிப்பை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடித்து கொடுத்த அனுஷ்கா அடுத்தக்கட்ட படப்பிடிப்பின்போது ரொம்பவே சொதப்பி வருகிறாராம்.

தற்போது விக்ரம் நடிக்கும் தாண்டவம், செல்வராகவனின் இயக்கத்தில் இரண்டாம் உலகம், இரண்டு தெலுங்குப் படம் என நடித்து வரும் அனுஷ்கா, அப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். அதனால்தான் சுராஜ், படத்திற்கு சரியான உத்துழைப்பு தருவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் இயக்குநர் சுராஜ், அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கலாமா என்று யோசித்து வருகிறாராம்

Comments