
பெங்களூர்: கன்னட படத்துக்காக சம்பளத்தை குறைத்து நடிக்கிறார் ஸ்ரேயா. கன்னடத்தில் திவ்யா நடிக்க மறுத்த படம் ‘சந்திரா. ரூபா அய்யர் இயக்குகிறார். இப்படத்தில் தற்போது ஸ்ரேயா நடிக்கிறார். மார்க்கெட் இழந்துவிட்டதாலும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் குறைந்த சம்பளத்தில் ஸ்ரேயா நடிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி ஸ்ரேயா கூறும்போது,‘சமீபகாலமாகவே கன்னடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. பிற மொழி படங்களில் பிஸியாக இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இம்முறை சூழ்நிலை சரியாக அமைந்ததால் ஒப்புக்கொண்டேன். இளவரசி வேடம் என்பதால் அதில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். மற்றொரு நடிகை வெளியேறிய படத்தில் நடிக்கிறேன் என்பது பெரிய விஷயம் இல்லை. அதுபோல் பல படங்களில் நடந்திருக்கிறது. கன்னடத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிப்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்கிறேன். இதற்கு மேல் இதுபற்றி என்ன சொல்ல வேண்டும்?ÕÕ என்றார்.
ஏற்கனவே இப்படத்துக்கு அமிர்தா ராவ், ஆண்டிரிட்டா ராய் ஆகிய நடிகைகளை நடிக்க வைக்கவும் இயக்குனர் ரூபா அய்யர் அணுகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment