ரஜினியின் பாட்ஷா பாணியில் இந்தியில் புதுப் படம்- டைரக்டர் பிரபுதேவா?!!!

Saturday, May, 12, 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து தமிழில் ஹிட் ஆன பாட்ஷா படத்தைப் போலவே இந்தியில் ஒரு புதுப் படம் உருவாகவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாட்ஷா குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் அதற்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இப்படத்தின் பாணியில் இப்போது இந்தியில் ஒரு படம் உருவாகவிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே இந்தக் கதை உருவாக்கப்படவிருக்கிறதாம். அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ளார். பிரபுதேவா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதுதான் அக்ஷய் குமாரை வைத்து ரெளடி ரத்தோர் படத்தை முடித்துள்ளார் பிரபுதேவா. அடுத்து அஜய் தேவ்கனுடன் இணையவுள்ளார் பிரபுதேவா.

பாட்ஷா படத்தின் காப்பி என்று சொல்ல முடியாது என்றாலும் கூட பாட்ஷா படத்தின் சில அம்சங்களை வைத்து கதை பின்னப்பட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து பிரபுதேவா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தேவ்கனுடன் இணையவிருப்பதை மட்டும் பிரபுதேவா உறுதி செய்துள்ளார்.

Comments