மார்க்கெட் தளர்ந்ததால் 'ஐட்டத்துக்குத்' தாவிய சதா!!!

Wednesday,May,09,2012
நடிகை சதா வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடனம் ஆடும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார்.

ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மும்பை அழகி சதா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு சங்கரின் அந்நியன் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. மாதவனுடன் எதிரி, வினயுடன் உன்னாலே உன்னாலே, ஆர்.கே.யுடன் புலி வேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரை ஆளையே காணோம்.

தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்காததால் இந்தி, போஜ்புரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். அங்கும் சிறிது காலத்தில் அவருக்கு மார்க்கெட் போய்விட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த அவர் தற்போது ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சியாக வந்து ஆடிவிட்டு போகும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார். சில நாயகிகள் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டால் இப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடி வாய்ப்பு வாங்குவதும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியாட்டத்தையும் முதலில் கோலிவுட்டில் இருந்தே துவங்கியிருக்கிறார். விஷாலை வைத்து சுந்தர் சி. எடுக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஒரு பாட்டுக்கு சதா கவர்ச்சியாக ஆடியுள்ளாராம். அந்த பாடல் ஒரு மில்லில் படமாக்கப்பட்டுள்ளது.

சதா அரைகுறை ஆடையில் இருந்தததால் அடையாள அட்டை வைத்திருந்த ஊழியர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை அந்த பக்கமே விடவில்லை.

Comments