அஜீத்தை தனியாவிட்டு லண்டன் பறந்த குடும்பத்தார்!!!

Thursday,May,31,2012
அஜீத் குமார் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் அவரை தனியாக விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றுள்ளனர்.

அஜீத் குமார் ஷூட்டிங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோருடன் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் நாளை மும்பையில் துவங்குகிறது. இதற்கிடையே அவரது குடும்பத்தார் கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் செல்ல திட்டமிட்டனர். ஆனால் அஜீத்துக்கு படப்பிடுப்புகள் இருப்பதால் அவர் லண்டன் வருவது கஷ்டம் என்பதை அவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இதையடுத்து அஜீத்தின் மனைவி ஷாலினி, செல்ல மகள் அனோஷ்கா, மாமனார், மைத்துனி ஷாமிலி ஆகியோர் மட்டும் லண்டன் பறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் ஜாலியாக லண்டனை சுற்றிப் பார்க்க தல மட்டும் இங்கு தனியாக உள்ளார்.

படப்பிடிப்புகள் இருப்பதால் குடும்பத்தார் வீட்டில் இல்லாதது ஒரு வேளை வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் தனது மகளை மிஸ் பண்ணுவார்.

Comments