ஜெயா டிவியில் சபாஷ் மீராவாக கலக்கும் கோவை சரளா!!!

Saturday, May, 19, 2012
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சபாஷ் மீரா நகைச்சுவை தொடர் மூலம் சின்னத்திரையில் அழுத்தமாக கால் ஊன்றியுள்ளார் கோவை சரளா.

சினிமாவில் நகைச்சுவை நடிகையாக முத்திரை பதித்தவர்கள் சின்னத்திரையிலும் தங்களுக்கு என தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர். மனோரமா ஆச்சி, சச்சு ஆகியோர் பெரிய திரையில் வாய்ப்பு இருந்தாலும் சின்னத்திரையில் நடித்து சிறப்பான இடத்தை பிடித்தனர். அவர்கள் வரிசையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரைக்கு வந்த கோவை சரளா கலைஞர் டிவியில் கேம் ஷோ நடத்திக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம் ஜெயா டிவியில் சபாஷ் மீரா என்ற நகைச்சுவை தொடரிலும் அவர் கலக்கலாக நடித்து தான் மாறுபட்ட நகைச்சுவை நடிகை என்று முத்திரை பதித்துள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காத்தாடி ராம்மூர்த்தியின் மகள் கதாபாத்திரம் கோவை சரளாவிற்கு. ஏ.வி.பி தயாரித்துள்ள இந்த தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருப்பவர் கோபு பாபு.

Comments