ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு : கோடம்பாக்கத்தில் பரபரப்பு!!!

Sunday, May, 06, 2012
சிம்பு சிபாரிசால் அவரது புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இருவரையும் இணைத்து கிசுகிசு கிளம்பியுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேட்டை மன்னன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இப்படம் மூலம் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் வாலு படத்தில் மீண்டும் ஹன்சிகாவே ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறி வந்தார். தற்போது அவர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்காக நேரம் ஒதுக்கி ஹன்சிகா நடித்துக்கொடுத்தார். இதுபற்றி ஹன்சிகா கூறும்போது,‘‘சிம்புவுடன் நடிக்கும் அடுத்த படத்துக்கான முன்னோட்ட காட்சியில் நடிப்பதற்காக சென்னையில் தங்கி இருக்கிறேன்.

இருவரும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ஜோடியாக தோன்றும் போட்டோ ஷூட் நடந்தது. ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் ஒன்றிரண்டு மாதத்துக்கு பிறகுதான் தொடங்குகிறது’’ என்றார்.
‘வாலு’ படத்தை புது இயக்குனர் விஜய் இயக்குகிறார். சந்தானம், கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். ஒரே ஜோடியை ரிபீட் செய்யாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோயினுடன் நடிக்க வேண்டும் என சிம்பு முடிவு எடுத்திருந்தார். ஆனால் அந்த முடிவை அவரே கைவிடும் வகையில் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஹன்சிகாவுக்கு சிம்பு சிபாரிசு செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Comments