
*‘பொம்மலாட்டம்’ ருக்மணி பரதநாட்டிய கலைஞர். அவரது நாட்டிய திறமையை முழுமையாக ‘கோச்சடையான்’ படத்துக்காக பயன்படுத்திக்கொண்டாராம் இயக்குனர் சவுந்தர்யா.
*தெலுங்கில் ‘தீனிகய்னா ரெடி’ படத்தில் மனோஜ் மன்சு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
*டிஜிட்டலில் தயாராகும் படங்களுக்கு டிஜிட்டல் 3 டி, ரெட் எபிக், ரெட் ஒன், கேனன் 5டி, 7டி ஆகிய கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
*‘தென்மேற்கு பருவகாற்று’ படத்தில் நடித்த காயத்ரி அடுத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
*‘வழக்கு எண் 18/9’ பட குழுவுக்கு தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கார்த்தி பிறந்தநாள்யொட்டி சகுனி படத்தின் ஒரு பாடலை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த இயக்குனர் சங்கர் தயாள், அந்த பிளானை கைவிட்டு இம்மாத இறுதியில் முழுபாடல் கேசட்டை வெளியிட உள்ளார்.
மலையாள படங்களில் துணிச்சலான பெண் கதாபாத்திரங்களுக்கு ‘யுவன் யுவதிÕ படத்தில் நடித்த ரீமா கல்லிங்களையே இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்களாம்.
தமிழ் படம் சிவா, தான் நடிக்கும் காட்சிகளில் தனது வசனத்தை டைரக்டர் அனுமதியுடன்தானே எழுதிக் கொள்கிறார்.
ஷங்கர் இயக்க விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் அசின் அல்லது பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஹாங்காங்கிலிருந்து திரும்பிய ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர் பிரசன்னா,சினேகா தம்பதி. அவர்களுக்கு ராகவேந்திரா படம் பரிசளித்து வாழ்த்தினார் ரஜினி.
பேஸ்புக்கில் இடம்பெறாமல் இருந்த கமல்ஹாசன், சமீபத்தில் இணைந்திருக்கிறார். ‘விஸ்வரூபம்’ படம் பற்றிய செய்திகளை அதில் தருகிறார்.
தமிழில் ‘சேட்டை’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது ‘டெல்லி பெல்லி’. இந்த படத்துக்காக கவர்ச்சி நடிகை சுஜாவிடம் ஆர்யா, அஞ்சலி பேட்டி எடுப்பது போன்ற காட்சியை படமாக்கினார் இயக்குனர் கண்ணன்.
‘அரவாண்’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கார்த்திக், அடுத்து கவுதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் இசை அமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
‘மனம் கொத்தி பறவை’ படத்தில் சின்ன சின்ன பொய் சொல்பவராக நடிக்கும் சிவ கார்த்திகேயன், பல காட்சிகளில் வில்லன் ரவி மரியாவிடம் அடிவாங்கி இருக்கிறாராம்.
ரஜினியின் ‘கோச்சடையான்’ தெலுங்கு படத்துக்கு ‘விக்ரம் சிம்ஹா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment