ஆர்ட் ஹவுஸின் புதிய ஆர்ட் காலரியைத் திறக்கும் கமல்ஹாசன்!!!

Thursday, May, 24, 2012
சென்னையைச் சேர்ந்த ஆர்ட் ஹவுஸ் கலையகத்தின் புதிய ஆர்ட் காலரியை நடிகர் கமல்ஹாசன் நாளை திறந்து வைக்கவுள்ளார்.

இதுகுறித்து ஆர்ட் ஹவுஸின் நிர்வாகிகளும், ஓவியக் கலைஞர்களுமான ஏபி ஸ்ரீததர் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் கூறுகையில்,

ஆர்ட் ஹவுஸ் உருவாக்கியுள்ள புதிய ஆர்ட் காலரியையும், கலர் சிம்பனி என்ற பெயரிலான ஓவியக் கண்காட்சியையும் கலைஞானி டாகட்ர் கமல்ஹாசன் 25ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். ஓவியர் ஸ்ரீதரின் 55வது ஓவியக் கண்காட்சி இது. சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் - பைன் ஆர்ட் காலரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு நிகில் - 9840077270 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Comments