என் இடம் அப்படியேதான் இருக்கு - தமன்னா!!!

Monday, ,May, 28, 2012
பிரபல நடிகர் ஒருவரை காதலித்தார், அது அந்தக் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குடும்பத்தின் செல்வாக்கு காரணமாகதான் தமன்னாவுக்கு தமிழில் படங்களில்லை... இந்த காஸிப் உங்களுக்கு‌த் தெ‌ரிந்திருக்கும். இதனை அடியோடு மறுக்கிறார் தமன்னா. நான் இதுவரை காதலிக்கவேயில்லை என்று எழுபது எம்எம்மில் புன்னகைப்பவர் தனது படங்கள் குறித்து பகி‌ர்ந்து கொண்டவை...

தமிழ் மேல அப்படி என்னதான் கோபம்? ஆளையே பார்க்க முடியவில்லையே...?

என்னைப் பார்க்கிற எல்லோரும் இதையேதான் கேட்கிறாங்க. எனக்கு அங்கீகாரமும், புகழும் முதலில் கிடைத்தது தமிழில்தான். எப்படி மறக்க முடியும்? தெலுங்குப் படங்களில் பிஸியாகிட்டதால் தமிழில் கவனம் செலுத்த முடியலைங்கிறது உண்மைதான். அதுக்காக மறந்துட்டேன்னு சொல்றதெல்லாம் அதிகம்.

ச‌ரி, எப்போதான் தமிழுக்கு வரப் போறீங்க?

ரொம்ப சீக்கிரம். ஏன் என்றால் காதல் என்பேன் படத்தில் நடிச்சிட்டிருக்கேன். விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது. அப்புறம் நான்கு டைரக்டர்ஸ் கதை சொல்லியிருக்காங்க. எனக்குப் பிடிச்ச கதையில் நடிப்பேன். கால்ஷீட்டைப் பொறுத்து அது ஒன்றா இரண்டா என்பது தெ‌ரியும்.


FILEரட்சா படத்தில் நடிச்சது பற்றி சொல்லுங்க?

ராம் சரண் தேஜா ஹீரோ. படம் ஆந்திராவில் சூப்பர்ஹிட். இந்த வருஷத்தை சநதோஷமாக்கிய படம். எனக்கு ரொம்பப் பிடிச்ச படமும்கூட. தமிழில் ரகளைங்கிற பெய‌ரில் வெளியிட்டாங்க. எனக்கு நல்ல பெயரை தந்த படம்.

தமிழ் என்று வரும் போது கதை, கேரக்டர் என்று பிகு செய்யும் நடிகைகள் தெலுங்கில் மட்டும் கமர்ஷியல் படங்களில் பேசாமல் ஆடிவிட்டு செல்வது ஏன்? ரட்சாவும் ஒ கமர்ஷியல் படம்தானே.

ஆந்திரா ரசிகர்கள் இப்போதும் கமர்ஷியல் படங்களை ரசிக்கிறாங்க. ஆனா தமிழில் அப்படியில்லை. அதனால்தான் மாஸ் ஹீரோக்களே அவ்வப்போது கமர்ஷியல் இல்லாத படங்களை ட்ரை பண்றாங்க. அதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

எல்லாம் ச‌ரி, இப்போதும் தெலுங்குக்குதானே முன்னு‌ரிமை கொடுக்கிறீங்க?

தெலுங்கில் நான் இப்போது நான்கு படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இதில் லாரன்ஸ் இயக்குகிற ‌ரிபெல் படமும் ஒன்று. ஆனால் அடுத்த வருஷத்திலிருந்து தமிழிலும் அதிக படங்களில் நடிப்பேன்னு நினைக்கிறேன்.

தமிழில் தமன்னாவின் இடத்தை ஹன்சிகா பிடிச்சிட்டதா ஒரு பேச்சிருக்கே?

ஹன்சிகா என்னைவிட சீனியர். சின்ன வயசிலேயே நடிக்க வந்திட்டாங்க. எனக்கும் அவருக்கும் சண்டைன்னுகூட எழுதினாங்க. ஆனா நானும் அவரும் ஃப்ரெண்ட்ஸ். ஒரு கல் ஒரு கண்ணாடி போஸ்டர் பார்த்திட்டு நல்லாயிருக்குன்னு போன் செய்தேன். சினிமாவில் யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது. தமிழில் என்னுடைய இடம் அப்படியேதான் இருக்கு. இயக்குனர்கள் தமிழில் என்னை நடிக்க வைக்க காட்டுற ஆர்வத்திலிருந்தே இது தெ‌ரியுது.

Comments