
மும்பையில் வெற்றி பெற்ற குல்லு தாதா என்ற இந்தி படத்தை ராக்கென்னடி பிலிம்ஸ், லொள்ளு தாதா பராக் பராக் என்ற பெயரில் தமிழில் தயாரிக்கிறது.
இதில், கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் தாதாவாக மன்சூர் அலிகான் நடிக்கிறார். 16 வயதே ஆன பிரவீன்-அஞ்சனா ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்காக, ``ஆம் பாம் புஸா பாம்'' என்ற ஜனரஞ்சகமான பாடலை மன்சூர் அலிகானின் மகள்கள் தில்ரூபா, ஜ×லைஹா ஆகிய இருவரும் சொந்த குரலில் பாடினார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.
வியாசன் டைரக்டு செய்துள்ள இந்த படத்துக்கு ரவி சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் எழுதி, இசையமைக்கிறார், மன்சூர் அலிகான்.
சொத்து பத்திரங்களை வைத்து வங்கிகளில் கடன் வாங்குகிற சிலர் அந்த கடனை சரியாக கட்டுவதில்லை. எந்த சொத்து பத்திரமும் இல்லாமல் தாதாவிடம் கடன் வாங்கியவர்கள் எப்படி கடனை கட்டுகிறார்கள்? என்பதே கதை.
மன்சூர் அலிகான் ஜோடியாக சில்பா நடிக்கிறார். பாண்டு, செவ்வாழை, நெல்லை சிவா, போண்டா மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
Comments
Post a Comment