புகையும் சுருட்டுடன் 'துப்பாக்கி' விஜய்!!!

Tuesday, May, 01, 2012
இன்று மே 1 என்பதால், சென்டிமென்டாக முக்கிய படங்களின் முதல் ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர்.

கமல் தனது விஸ்வரூபம் ஸ்டில் மற்றும் ட்ரைலரை வெளியிட்டதைப் போலவே, நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் டிசைனை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இந்த போஸ்டரில் பெரிய சுருட்டைப் பிடித்துக் கொண்டிருப்பது போல விஜய் போஸ் தருகிறார். இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசாக நடித்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி என்ற தலைப்பை துப்பாக்கி மாதிரியே வடிவமைத்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Comments