மீண்டும் நடிக்க மாட்டேன்: மாளவிகா!!!

Tuesday, ,May, 22, 2012
மும்பையில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் செட்டிலாகி விட்ட மாளவிகா, மீண்டும் தமிழில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, கூறியதாவது: ஒரு பாடலுக்கு ஆடவும், டி.வி தொடரில் நடிக்கவும் அழைப்பு வந்தது. இப்போது என் குடும்பத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவதால், மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லை. சமீபத்தில் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க கேட்டனர். குழந்தைகளையும், வீட்டையும் கவனித்துக்கொள்ள நேரம் சரியாக இருப்பதால், அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

Comments