கொழுக், மொழுக்னு இருந்தாத்தான் ரசிகர்களுக்கு பிடிக்குது: ஹன்சிகா!!!

Saturday, ,May, ,26, 2012
சென்னை::தான் கொழுக், மொழுக் என்று இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிப்பதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

சாப்பிடாமல் பட்டினி கிடந்து, ஜிம்மில் தவமிருந்து உடலை நரம்பாக வைத்திருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்சிகா வித்தியாசமானவர். அமுல் பேபி மாதிரி கொழுக், மொழுக் என்று இருக்கிறார். இந்நிலையில் அவர் உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

உடல் எடையைக் குறைக்க நான் ஒன்றும் அமெரிக்கா செல்லவில்லை. உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுகோப்பாக வைத்துள்ளேன். நான் கொழுக், மொழுக் என்று இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. அதனால் நான் ஒல்லியாக மாட்டேன். ஆனால் உடற்பயிற்சி செய்து குண்டாகிவிடாமல் பார்த்துக்கொள்வேன். சேட்டை படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பது ஓர் இனிமையான அனுபவம். அந்த படத்தின் ஷூட்டிங் ஜாலியாக போகிறது.

சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருக்கிறேன். அதன் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது என்றார்.

நல்ல முடிவு ஹன்சிகா. நீங்க ஒல்லியானா நல்லா இருக்காது. கும்முன்னு இருப்பது தான் ஹன்சிகாவுக்கு அழகு.

Comments