Tuesday, ,May, 22, 2012
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தனது அம்மாவை கவனிப்பதற்காக நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து விலகினார் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் கன்னட படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே கன்னடத்தில் ‘அபியும் நானும்' பட ரீமேக்கை இயக்கி நடித்தார். தற்போது யோகராஜ் பட் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இது ஆக்ஷன் கலந்த வில்லன் வேடம். எதிர்பாராதவிதமாக அப்படத்திலிருந்து பிரகாஷ் ராஜ் வெளியேறிவிட்டார். இதுக்கு காரணம், அவரது அம்மா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரை உடனிருந்து கவனிக்க முடிவு செய்தார். இதையடுத்து கன்னட படத்திலிருந்து விலகினார்.
இதுபற்றி இயக்குனர் யோகராஜ் கூறும்போது, ‘பிரகாஷ்ராஜின் அம்மா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். இந்த நேரத்தில் பிரகாஷ்ராஜிடம் கால்ஷீட் கேட்டால் அது தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும். இதையடுத்து அவர் விலகலை ஏற்றுக்கொண்டேன். தற்போது அவர் நடிக்க இருந்த வேடத்துக்கு சரத்குமார் அல்லது அதுல் குல்கர்னி நடிக்க பேச்சு நடக்கிறது என்றார். ‘எனது அம்மா உடல் நலமில்லாமல் இருப்பதால் இந்த நேரத்தில் அவரது தேவைகளை பூர்த்தி செய்ய ஆசைப்பட்டேன். இதையடுத்து படத்திலிருந்து வெளியேறினேன் என்றார் பிரகாஷ் ராஜ்.

Comments
Post a Comment