மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறார் ஜோதிகா!

Friday, ,May, ,25, ,2012
சென்னை::நடிகை ஜோதிகாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஜோதிகா ஒரு நல்ல நடிகை அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் எனக்கு ஆசை என்று திருமணத்தின் போது சொல்லி இருந்தார் சூர்யா. ஆனால் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க ஜோதிகா விரும்பவில்லை.

மலையாளத்தில் 'சீதா கல்யாணாம்' என்ற படம் தான் ஜோதிகாவின் கடைசி படம். தமிழில் கடைசி படமாக அமைந்தது 'மொழி'. திருமணத்திற்கு பின்னர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனம் தயாரித்த குரும்படத்திலும், சூர்யாவுடன் சேர்ந்து சில விளம்பரப் படங்களிலும் நடித்தார் ஜோதிகா.

இது பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார் சூர்யா. ஜோதிகாவுக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசை இருக்கிறது. விளம்பரப் படங்களில் நடிக்க இரண்டு மூன்று நாட்கள் தான் கால்ஷீட் தேவைப்படுகிறது. ஆனால் சினிமாவில் நடிக்க நிறைய நாட்கள் தேவைப்படும். அத்தனை நாட்கள் குழந்தைகளை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை வரும். குழந்தைகளின் நலனுக்காகவே தன் நடிப்பு ஆசையை அப்படியே அழித்துவிட்டார் ஜோதிகா.

ஆனால், காலம் என்ன முடிவு செய்யும் என்பதை நாம் சொல்ல முடியாது. ஒரு சரியான நேரம் அமைந்தால் ஜோதிகா மீண்டும் வெள்ளித்திரையில் வலம் வரும் காலம் வரும் என்று சொல்கிறார் சூர்யா.

Comments