
பாலாவின் பரதேசி படத்தில் இருந்து நடிகை பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறார்.
இயக்குனர் பாலா இயக்கும் பரதேசி படத்தில் பூஜா தான் நாயகி என்று அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களாக கோலிவுட்டில் காணாமல் போன பூஜா இதன் மூலம் மறுபிரவேசம் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறாராம்.
படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பூஜா கூறுகையில்,
நான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். கால்ஷீட் பிரச்சனையால் தான் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.
பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார் பூஜா. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த துரோகி படத்தில் கௌரவ வேடத்தில் வந்த பூஜாவை அடுத்து பார்க்கவே முடியவில்லை. இனி எப்பொழுது தான் கோலிவுட்டுக்கு வருவாரோ தெரியவில்லை.
Comments
Post a Comment