திடீர் குண்டானது பற்றி ஜஸ்வர்யா ராய் விளக்கம்!!!

Sunday, ,May, ,27, 2012
மும்பை::உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்த பிறகு அவர் உடல் எடை கூடியது. சமீபத்தில் கேன்ஸ் பட விழாவில் நவநாகரீக உடை அணிந்து பருமனான உடலுடன் போட்டோவுக்கு போஸ் தந்தார். அந்த படத்தை பார்த்து இது ஐஸ்வர்யா ராயா என்று பலர் முணுமுணுத்தனர்.
இது குறித்து ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது, ‘என்றைக்குமே எனது இயற்கை தோற்றத்தை மறைத்தது கிடையாது. உணவு வகையிலும் எந்த கட்டுப்பாடும் கடைபிடிக்கவில்லை. குழந்தை பிறந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். எனக்கு பிடித்த உணவை எப்போதும்போல் விரும்பி சாப்பிடுகிறேன். இப்போதைய தோற்றமும் இயற்கையானதுதான். அதை மறைக்க விரும்பவில்லை என்றார்.
ஐஸ்வர்யாவின் தோற்றம் பற்றி பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கூறும்போது, ‘ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவுக்கு வந்தபோது தனது புன்னகையாலும், தன்னம்பிக்கையான பேச்சாலும் பலரது இதயத்தை கொள்ளை கொண்டார். சற்று பூசினாற்போன்ற அவரது தோற்றம்கூட வசிகரமாகவே இருக்கிறது என்றார். உடற்பயிற்சி ஆலோசகர் சாயா மெமாயா கூறும்போது, ‘உடல் தோற்றத்தை தாண்டி அவர் எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறார். போட்டோவுக்கு அவரது உருவம் ஒத்துப்போகாமல் இருக்கலாம். ஆனால் தன்னம்பிக்கையான பெண் என்பதற்கு என்றுமே அவர்தான் வழிகாட்டி. மற்றவர்களின் கருத்தை நடிகைகள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு பிடித்ததைத்தான் அவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஐஸ்வர்யா செய்து வருகிறார் என்றார்.

Comments