அசின் வருகை! மீண்டும் சர்ச்சை!!!

Monday, ,May, 28, ,2012
இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்திற்கு யார் ஹீரோ? என்ற கேள்விக்கு இருந்த பரபரப்பு விலகி, ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டுள்ள நடிகை நடிக்கக் கூடாது என்ற எதிர்ப்பு எழுந்துவிட்டது.

ஷங்கர் இயக்கத்தில் விகரம் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்திற்கு ’தேர்தல்’ என பெயர் சூட்டியுள்ளார்களாம். இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட். ஹீரோ காம்பினேஷன் திருப்தி அளித்ததும் ஹீரோயின் தேர்வுக்காக தேடிய ஷங்கருக்கு பாலிவுட்டில் நல்ல மார்கெட்டுடன் இருக்கும் அசின் தான் தெரிந்திருக்கிறார் போல.

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். ஆனால் தமிழ் படத்தில் அசினை நடிக்க வைக்கக் கூடாது என ஷங்கரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் எச்சரிக்கையும் வேண்டுகோளும் விடப்பட்டுள்ளதாம்.

அசின் விஜய்யுடன் ’காவலன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்று அந்நாட்டு அதிபர்கள் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அசினின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ‘காவலன்’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

ஒருவழியாக எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து ‘காவலன்’ படம் ரிலீஸானது. இப்போது அசின் ஷங்கர் படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி பரவியதும், ஷங்கருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஷங்கரின் இந்த படத்திற்கு தேர்தல் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் படத்தில் அரசியல் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

ஷங்கரின் முதல்வன் படம் அரசியலில் நடக்கும் தவறுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments