என் மகளை நடிகை ஆக்கமாட்டேன் : ஸ்ரீதேவி முடிவு!!!

Tuesday, ,May, ,15, 2012
என் மகளை நடிகை ஆக்கும் எண்ணம் இல்லை என்றார் ஸ்ரீதேவி. தமிழில் 1980களில் கொடி கட்டி பறந்த ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையானார். போனி கபூரை மணந்தபிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் சினிமாவில் ரீ என்டரி ஆகிறார். அவர் கூறியதாவது: 4 வயது முதலே நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஸ்டுடியோவை விட்டால் வீடு, வீட்டை விட்டால் ஸ்டுடியோ என்றுதான் வாழ்க்கை கழிந்தது. நடிப்புக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித் திருந்தேன். மற்ற பெண்களைப் போல் திருமணத்துக்கு பிறகு குழந்தைகளுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக எண்ணினேன். அது நடந்தது. இல்லற வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க விரும்பினேன். என் மகள் ஜானவி, குஷி இருவரையும் பள்ளிக்கு அழைத்து சென்று விடும்போதும் அவர்கள் ‘மம்மிÕ என்று என்னை அழைத்தபோதும் அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாது. அந்த தருணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் சின¤மாவிலிருந்து விலகியே இருந்தேன். கடவுள் பக்தி,

பிரார்த்தனைகளைதான் என் மகள்களுக்கு கற்பித்திருக்கிறேன். அந்த வழியில்தான் நான் வளர்க்கப்பட்டேன். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்கள் காலை தொட்டு வணங்க வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறேன். ‘ஜானவியை நடிகையாக்க விரும்புகிறீர்களா? என்கிறார்கள். ஒருபோதும் அப்படி எண்ணியதில்லை. நடிகையின் மகள் என்பதால் அவரும் நடிகையாவார் என்று எண்ணுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று பிரபல நடிகர்களுடன் அவரது பெயரை இணைத்துபோட்டு ஜோடியாக நடிப்பதாக எழுதுகிறார்கள். அதையெல்லாம் பார்த்து சிரிப்பேன். சிறுவயது முதல் நடித்ததால் என்னால் படிப்பை தொடர முடியாமல் போனது. அந்த கல்வியை மகள்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஜானவி ந¤ச்சயம் நடிக்க வரமாட்டார்.

Comments