சன் டிவியில் மதுரை முத்து-தேவதர்ஷினியின் புதிய காமெடி நிகழ்ச்சி!!!

Wednesday,May,16,2012
விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கி சில வருடங்கள் சன் டிவியின் அசத்தப்போவது நிகழ்ச்சியில் அசத்திய நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. திடீர் விபத்தினால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த முத்து சன் டிவியில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

மதுரை முத்து உடன் இணைந்து காமெடியில் கலக்குபவர் தேவதர்ஷினி. ஞாயிறுதோறும் காலையில் ஒளிபரப்பாகும் இந்த காமெடி நிகழ்ச்சியில் போலீஸ் கான்ஸ்டபில் வேடத்தில் தேவதர்ஷினியும், திருடனாக மதுரை முத்துவும் சேர்ந்து காமெடி செய்ய முயற்சி செய்தனர்.

இதேபோல நிகழ்ச்சி சில பல வருடங்களுக்கு முன்பு நம்மநேரம் என்ற பெயரில் ஒளிபரப்பானது போல நினைவுக்கு வருகிறது. எது எப்படியோ காலை நேரத்தில் நிகழ்ச்சிக்குப் பஞ்சம் வந்தால் என்ன செய்வது பழைய நிகழ்ச்சியின் கருவை எடுத்து புதிய நடிகர்களை நடிக்க வைத்து தூசு தட்டி புதுசு போல ரெடி செய்து ஒளிபரப்பவேண்டியதுதானே.

சினிமாவிலேயே பழைய திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தொலைக்காட்சியில் பழைய நிகழ்ச்சிகளை ரீமேக் செய்யக்கூடாதா என்ன? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.

ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த கலக்கல் காமெடி நகைச்சுவை பிரியர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி என்கின்றனர் இதனை பார்த்து ரசித்த காமெடி பிரியர்கள்.

பார்த்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

Comments