வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஆதி - லட்சுமி மஞ்சு!!!

Wednesday,May,09,2012
மறந்தேன் மன்னித்தேன் படத்தின் படப்பிடிப்பில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர் நடிகர் ஆதி மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மஞ்சு. அருகிலிருந்த மீனவர்கள் இருவரையும் கரை சேர்த்தனர்.

நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடிக்கும் படம் மறந்தேன் மன்னித்தேன். இந்தப் படத்தில் நாயகனாக ஆதி நடிக்கிறார். இன்னொரு இணையாக தப்சியும் சுதீப் கிஷனும் நடிக்கின்றனர். நாகேந்திர குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி நதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதற்காக ஆற்றின் ஓரம் 170 குடிசைகள் அமைத்து, அவை வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல காட்சி. வெள்ளம் வருவது போல காட்சியை எடுக்க, அருகிலிருந்த அணையை சிறிது நேரம் திறக்க சிறப்பு அனுமதி பெறப்பட்டிருந்தது. 20 கேமராக்களில் இந்தக் காட்சியை படமாக்க அனைவரும் தயாராக இருந்தனர்.

நள்ளிரவு 12.15-க்கு அணையின் 6 மதகுகளை திறந்துவிட்டனர். தண்ணீர் பெரும் வேகத்தில் பாய்ந்து வர, குடிசைகளின் அருகில் நின்ற ஆதியும் லட்சுமி மஞ்சுவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 400 அடி தூரத்துக்கு ஆற்றில் சென்றுவிட்டனர்.

உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் நதியில் பாய்ந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

Comments