Tuesday, May, 22, 2012
சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, பேச்சு வார்த்தை நடத்த, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்-தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்-தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இடையே, முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு, தயாரிப்பாளர்கள் சங்க "அட்ஹாக்' கமிட்டி மூலம், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், "அட்ஹாக்' கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர், தயாரிப்பாளர்கள் முரளிதரன், கே.ராஜன், சீனிவாசன், சித்ராலட்சுமணன், சிவா மற்றும் ராதாகிருஷ்ணன் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், நேற்று தொழிலாளர் நலத்துறை கமிஷனருடன், பேச்சு வார்த்தை நடத்துவதாக இருந்தது. நேற்று அழைப்பு இல்லாததால், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அழைக்கும் போது, இக்குழுவினர் பெப்சி அமைப்பு நிர்வாகிகளுடன், பேச்சு வார்த்தை நடத்தி, சினிமா தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை குறித்து, முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment