கண்டதும் காணாததும்! - சினிமா விமர்சனம்!!!

Tuesday, ,May, 22, 2012
நடிப்பு: விகாஷ், சுவாஷிகா, பரோட்டா சூரி, ஆர் சுந்தரராஜன், சூப்பர் குட் லட்சுமணன், ரிஷா

ஒளிப்பதிவு: வின்ஷி பாஸ்கி

பிஆர்ஓ: சக்திவேல்

இசை: விஏ சார்லி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சீலன்

தயாரிப்பு: எஸ்பி பிலிம்ஸ்

காமம் களவு

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

-இந்தக் குறளைச் சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறார் புதிய இயக்குநர் சீலன். நோக்கம், சொல்ல நினைத்த கருத்து நல்ல விஷயம்தான் என்றாலும், அதை அழுத்தமாகச் சொல்லாமல் போனதால், பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஈர்ப்பில்லாமல் போகிறது.

கல்லூரியில் படிக்கும் முகிலுக்கும் (விகாஷ்) உடன் படிக்கும் கவிதா (சுவாஷிகா) வுக்கும் நெருக்கமான நட்பு. அந்த நட்பை காதலாகும் தருணத்தில், விகாஷின் காமம் அந்தக் காதலை கெடுக்கிறது. தவறை உணர்ந்து மீண்டும் அவளுடன் நட்பு பாராட்ட முனைகிறான். ஆனால் அவனை கடைசி வரை மன்னிக்கவே மறுக்கிறாள் கவிதா. விளைவு தாடி வளர்த்து, குடித்து, தெருவில் விழுந்து கதறுகிறான் முகில்.

இருவருக்கும் மீண்டும் காதல் வந்ததா.. என்பதுதான் கிட்டத்தட்ட கதை!

விகாஷ் கல்லூரி மாணவராக இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் சுவாஷிகாவும் பரவாயில்லை.

பரோட்டா சூரிக்கு சோலோ காமெடி. அவரை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருந்தால், காட்சிகளை எளிதில் கடந்திருக்க முடியும்!

ஒளிப்பதிவாளர் தீவிர மணிரத்னம் பட ரசிகர் போலிருக்கிறது. பல காட்சிகள் அரை இருட்டில் அல்லது முக்காலிருட்டில்!

ஆனால் பாடல்கள் பரவாயில்லை.

பெரும் பணத்தை செலவழித்து படம் எடுக்கிறார்கள். கைவசம் ஸ்கிரிப்ட் இருந்தாலும், அதை சரியாக காட்சிப்படுத்தும் முறையில் கோட்டைவிடுவதால், கண்டதும், மறந்துவிடும் ரகத்தில் சேர்ந்துவிடுகின்றன இந்த மாதிரிப் படங்கள்!

Comments