
பிரபுதேவாவின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சினிமாவில் இன்றைக்கு நடன இயக்குநர்களாக பிரபலமானவர்கள் அனைவருமே பிரபுதேவாவிடம் பணிபுரிந்தவர்கள்தான்.
பிரபுதேவாவை சிறப்பிக்கும் விதமாக விஜய் டிவியில் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 மறுபடியும் தொடங்கியுள்ளது. பல்வேறு சுற்றுக்களைக் கடந்து முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடன இயக்குநர்கள் ஸ்ரீதர், காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியின் நாயகன் பிரபுதேவா பங்கேற்றது போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. நடனப்போட்டியில் வில்லாக வளைந்து நடனமாடியவர்களைக் கண்டு பிரபுதேவாவே ஒரு கணம் வியந்துதான் போனார். என்னால் கூட இந்த மாதிரி ஸ்டெப்ஸ் போட முடியாது என்று பிரபுதேவா கூறியது அவரது தன்னடக்கத்தை காட்டியது.
அப்பாவிடம் நடனம் கற்று நடன இயக்குநராக உயர்ந்து இன்றைக்கு மிகப்பெரிய இயக்குநராக பெயர் பெற்றிருந்தாலும் நடனம்தான் தன் வாழ்க்கையை உயர்த்தியது என்பதை இன்றைக்கும் பெருமையோடு ஒத்துக்கொள்கிறார் பிரபுதேவா.
ஞாயிறுக்கிழமை என்றாலே சினிமாதான் ஒளிபரப்பவேண்டும் என்ற ட்ரெண்டை மாற்றி நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களை கவரமுடியும் என்று மீண்டும் நிரூபித்துள்ளது விஜய் டிவி.
அது சரி. பிரபு தேவாவின் பெயரில் வரும் நிகழ்ச்சி என்பதற்காக நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பிரபுதேவாவை அடிக்கடி புகழ்வது கொஞ்சம் ஓவராக இல்லை?
Comments
Post a Comment