சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்!!!

Sunday, May, 06, 2012
திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

பொது இடங்களில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், குறிப்பாக ஆன்மீகத் தலங்களில் சினிமாக்காரர்கள் செய்யும் அட்டாகசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

கோவில்களில் படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகங்களை சுழிக்க வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஷகீலாவை வைத்து நடந்த படப்பிடிப்பால் மக்கள் கடுப்பாகி விட்டனர்.

ரவி என்பவர் தானே ஹீரோவாக நடித்து, இயக்கி உண்மை என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை திருநள்ளார் கோவில் நளன் குளம், கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைத்திருந்தனர்.

கோவில் வாசலை கிட்டத்தட்ட முக்கால்வாசி அடைத்தபடி படப்பிடிப்பை நடத்தினர். அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா, காமெடியன்கள் வையாபுரி, போண்டா மணி, அல்வா வாசு, பாண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமெடி செய்வதாக காட்சி.

இதனால் பக்தர்களால் கோவிலுக்குள்ளே போகவும் முடியவில்லை, உள்ளிருந்து வெளியேறவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஷகீலாவை யாரும் எதுவும் செய்து விடாமல் தடுக்கும் வகையில், படப்பிடிப்புக் குழுவினர் வேறு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்தபடி இருந்தனர்.

போலீஸாரின் முழு பாதுகாப்புடன் ஷூட்டிங் தொடர்ந்ததால் மக்கள் கடும் அதிருப்தியைடந்தனர்.

Comments