Saturday, May, 19, 2012
ரவி தேஜா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட த்ரிஷா, திடீரென்று விலகிவிட்டார். டோலிவுட் ஹீரோ ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘சார் ஒஸ்தாரா’. இந்த படத்துக்காக ஹீரோயின் தேர்வு வேலையில் மும்முரமாக இருந்தார் இயக்குனர் பரசுராம். இந்நிலையில், த்ரிஷாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யும்படி ரவி தேஜா சிபாரிசு செய்தாராம். இதையடுத்து த்ரிஷாவை சந்தித்த இயக்குனர், அவரிடம் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதித்த த்ரிஷா, கால்ஷீட்ஒதுக்கி தந்தார். இந்நிலையில், ரவி தேஜா படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா நேற்று திடீரென்று அறிவித்தார். ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து விலகியது ஏன் என்று கேட்டபோது, இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மைதான். இதற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்தேன். ஆனால், தற்போது கால்ஷீட் தேதி மாற்றி கேட்கிறார்கள். அதை ஏற்றால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டிருந்த படங்களின் கால்ஷீட்டில் பிரச்னை ஏற்படும். அதனால் ரவி தேஜா படத்தில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது’ என்றார். இதையடுத்து காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

Comments
Post a Comment