
அஜீத்துக்கே இந்த நியூஸ் தெரியுமா என்பது சந்தேகம். ஆனாலும் மாஸ் ஹீரோக்கள் பற்றிய காஸிப்பையும் கரெக்டாக வாசகர்களிடம் சேர்க்க வேண்டியது நமது கடமை.
பில்லா 2-வை முடித்துள்ள அஜீத் அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதையடுத்து சிறுத்தையை இயக்கிய சிவாவின் இயக்கத்தில் நடிக்கிறார். நாகி ரெட்டியின் விஜயா புரொடக்சன் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கயிருப்பது ரவி தேஜா நடித்த தெலுங்குப் படமான Daruvu என்றொரு செய்தி கிளம்பியிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் படம் நேற்றுதான் திரைக்கு வந்தது. சிவா இயக்கிய சிறுத்தை ரவி தேஜா நடித்த விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக். அதனால் அவரின் அடுத்தப் படமும் ரவி தேஜா நடித்தப் படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற யூகத்தில் கிளப்பிவிடப்பட்ட செய்தியாகவே இது என தெரிகிறது.
Comments
Post a Comment