நடிகர் நடிகையருக்கு தனியே "வெட்டிங் பார்ட்டி' கொடுக்கும் சினேகா!!!

Monday, May, 07, 2012
சினேகா வீட்டில் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது. குடும்பத்தினரோடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்து கல்யாண பத்திரிக்கையைக் கொடுத்த அவர் தற்போது தனது திருமண விழா ஏற்பாடுகளில் தீவிரமாகி விட்டார்.

தமது திருமணத்தை 4 நாள் விழாவாக நடத்துகிறாராம் சினேகா. முதல் நாளில் அவர் நடிகர், நடிகைகள் மற்றும் நட்பு வட்டாரத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை "வீட்டிலேயே" கொடுத்து அசத்த இருக்கிறார்.

அப்புறமாக மெஹந்தி, சங்கீத் என்று 2 விழாக்களை ரொம்பவும் ஆடம்பரமாக நடத்த உள்ளார். இருக்கிற எல்லா நிறத்திலுமே பட்டுச் சேலைகளை வாங்கிக் குவித்திருக்கிறாராம். பட்டுச் சேலை சினேகாவுக்கு பிடித்தமானவை மட்டுமல்ல, அவருக்கு அவை படு பாந்தமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

காஞ்சிபுரத்துக்கு தானே நேரடியாக சென்று முகூர்த்த பட்டுப் புடவையை வாங்கியிருக்கிறார். பிரசன்னா பிராமணர் என்பதால் இந்தத் திருமணம் இரண்டு முறைப்படி நடக்கவிருக்கிறது. முதலில் சினேகாவின் நாயுடு முறைப்படியும், பின்னர் பிராமண முறைப்படியும் கல்யாணம் நடைபெறவுள்ளது.

பிராமண முறைப்படி நடைபெறும் திருமணத்தின்போது மாமிகள் கட்டுவது போல மடிசார் கட்டிக் கொண்டு பிரசன்னாவைக் கரம் பிடிக்கவுள்ளார் சினேகா.

மாதுரி தீட்சித் போல காக்ரா உடையிலும் திருமண நாளில் உலா வருகிறார் சினேகா. சினேகாவின் அனைத்து டிசைன்களையும் அவரது அக்காதான் வடிவமைத்து வருகிறார். திருமணத்தை நினைத்தாலே சினேகாவுக்கு "மனசுக்குள் ஆயிரம்பட்டாம் பூச்சிகள் பறக்கிறதாம்"...

Comments