
மலையாளப் படங்களில் நடித்ததால் சில நல்ல பழக்கங்கள் சரத்குமாரிடம் தென்படுகின்றன. அதில் ஒன்று சின்ன வேடம் என்றாலும் நல்ல படங்களில் தன்னை இணைத்துக் கொள்வது. காஞ்சனாவுக்குப் பிறகு கோச்சடையானில் சிறிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மலையாளத்திலும் இப்படி அவர் நடித்த சில படங்கள் - முக்கியமாக ஓரிடத்து ஒரு போஸ்ட்மேன் - சரத்குமாருக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. சமீபத்தில் இவர் நடிக்க ஒப்புக் கொண்ட இன்னொரு படம் துப்பாக்கி.
விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் முக்கியமான சிறிய வேடம் ஒன்றில் சரத்குமார் நடிக்கிறார். ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு தெலுங்கில் துக்கடா ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் சத்யராஜுக்கு சரத்குமார் எவ்வளவோ மேல்.
Comments
Post a Comment