வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி!!!

Thursday, ,May, 17, 2012
அது எப்படி ஒரு லவ்வப்பல் கதாநாயகனை வில்லனாக நடிக்க இந்த தமிழ் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று அதிர்ச்சியோடு இந்த செய்தியை படிக்க வந்தீர்களா?

உண்மையாக ஒரு படத்தில் ஜெயம்ரவி வில்லனாகத்தான் நடிக்கிறார். அதாவது, சமுத்ரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார் என்று உங்களுக்கு ஏற்கனவேத் தெரியும். அதுவல்ல செய்தி.

அந்த படத்தில் ஜெயம்ரவிக்கு இரட்டை வேடம். ஒரு வேடம் 40 வயதை தாண்டிய வில்லன் வேடம். மற்றொன்று கதாநாயகன் வேடம். இந்த 40 வயது கதாப்பாத்திரம் ஏறக்குறைய நெற்றிக்கண் அப்பா ரஜினியைப் போல பெண் சபலம் கொண்டவராக அமைக்கப்பட்டுள்ளது. இதில்தான் ஜெயம்ரவி நடிக்கிறார். இப்போ புரியுதா தலைப்பு.

ஆனால் நெற்றிக்கண் கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அலறி அடித்துக் கொண்டு ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் சமுத்ரக்கனி.

Comments