
திருமணத்துக்கு முன்பு நடிகர், நடிகைகளுக்கு ஸ்பெஷல் பார்ட்டி தருகிறார் சினேகா. நடிகர் பிரசன்னா,சினேகா திருமணம் வரும் 11ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகிறது. இது பற்றி சினேகா கூறியதாவது: எனது திருமண விழாவை 4 நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளேன். முதலாவதாக என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள், தோழிகளுக்கு என் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி தருகிறேன். நான்கு நாள் விழாவில் மெஹந்தி, சங்கீத் என இரண்டு விழாக்கள் ஆடம்பரமாக நடக்க உள்ளது. திருமணத்துக்காக எல்லா நிறத்திலும் பட்டு சேலை வாங்கிவிட்டேன்.
மணமேடையில் அமரும்போது அணிவதற்காக காஞ்சிபுரம் சென்று பட்டு சேலைகள் வாங்கினேன். இருமுறைப்படி திருமணம் நடப்பதால் பிராமண முறைப்படி மடிசாரும் அணிந்துகொள்ள உள்ளேன். ஒவ்வொரு விழாவின்போதும் விதவிதமான சேலையும், ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் திருமண காட்சியில் மாதுரி தீட்சித் அணிந்து வந்ததுபோல் காக்ரா உடை அணியவும் உள¢ளேன். எல்லா காஸ்டியூம் டிசைன்களையும் எனது அக்காதான் வடிவமைக்கிறார். பாரம்பரிய முறையிலேயே இந்த திருமணம் நடக்கவுள்ளது. திருமண நாளை நினைத்தால் மனசுக்குள் ஆயிரக்கணக்கில் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது. பிரசன்னா எனக்கு மிக பொருத்தமான ஜோடி. இவ்வாறு சினேகா கூறினார்.
Comments
Post a Comment