கோவாவில் காதலனுடன் நீது சந்திரா!!!

Wednesday,May,09,2012
ஆதிபகவன் ஷூட்டிங்கிற்காக கோவா சென்ற நீது சந்திரா, பாலிவுட் ஹீரோ ரன்தீப்புடன் அங்கு பொழுதை கழித்தார். ஜெயம் ரவி ஜோடியாக ‘ஆதிபகவன்Õ படத்தில் நடிக்கிறார் நீது சந்திரா. இதன் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. இதற்காக அங்கு தங்கி இருந்தார் நீது. இதற்கிடையில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹுடாவுடன் இணைத்து நீது பற்றி கிசுகிசு பரவியது. ரன்தீப் ஏற்கனவே சுஷ்மிதா சென்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். சீனியர் நடிகையுடன் தனது பெயர் இணைத்து பேசப்படுவதை ரன்தீப் விரும்பவில்லை. இதை தவிர்க்கும் பொருட்டு மீடியாவிடமிருந்து விலகி சென்றார்.

அதற்கு மாற்றுவழி இளம் நடிகையுடன் பழகுவதுதான் என நண்பர்கள் யோசனை கூறினர். அந்த நேரத்தில் நீதுவின் நட்பு கிடைத்தது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசியும், டேட்டிங் செய்தும் நெருக்கமானார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பழகி வருகின்றனர். ஆனால் இருவருமே இதை மறுக்கின்றனர். இந்நிலையில் நீதுவுக்கு கிரேக்க மொழி படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதற்காக 2 மாதத்துக்கும் மேல் அவர் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. இதற்கிடையில் ரன்தீப்புடன் ஜோடியாக இருக்க விரும்பினார். அதற்கேற்றார்போல் ரன்தீப் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. அதில் பங்கேற்க சென்றார். ‘ஆதிபகவன்' ஷூட்டிங் முடிந்து பட குழுவினர் கோவாவில் இருந்து புறப்பட்ட பிறகும் ரன்தீப்புக்காக நீது மட்டும் அங்கேயே தங்கி இருந்தார். அவர் வந்தவுடன் அவருடன் ஷாப்பிங், டேட்டிங் என பொழுதை கழித்துவிட்டு வெளிநாடு புறப்பட்டு சென்றார் நீது.

Comments