3Dல் வெளியாகும் 'அமெஸிங் ஸ்பைடர் மேன்'!!!

Thursday,May,31,2012
குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பற் சக்தி கதாபாத்திரங்களில் முக்கியமானது ஸ்பைடர் மேன். ஸ்பைடர் மேன் சார்ந்த கற்பனைகளில் எத்தனைப் படங்கள் வெளிவந்தாலும் அவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இப்போது மற்றொரு அம்சமாக 3Dல் ஸ்பைடர் மேன் படம் வெளியாக இருக்கிறது.

ஸ்பைடர் மேன் வரிசையில் குழந்தைகளையும், பெரியவர்களையும் கவர வருகிறது 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்'. முற்றிலும் 3Dல் வர இருக்கும் இப்படத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டு (Andrew Garfeld) நடிக்கிறார். மேலும் இந்த அமெஸிங் ஸ்பைடர் மேன் படத்தில் இந்தி நடிகர் இர்ஃபான் கானும் நடித்திருக்கிறார். வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் இந்தித் திரையுலகில் பளிச்சிட்டு வரும் இர்ஃபான் கான் இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் பளிச்சிடப் போகிறார்.

உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வருவதும் வளர்ச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பதைப் பற்றிய கதைதான் அமெஸிங் ஸ்பைடர் மேன்.

இப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் படப்பிடிப்பு தொடங்கியது. அதுவும் 'ரெட் எபிக்' கேமராவுடன் இந்தக் கேமரா பல மாயாஜால தொழில்நுட்பங்ளின் சங்கமம். ஏப்ரல் 2011ல் படப்பிடிப்பு முடித்து படப்பிடிப்புக்கு பிந்தைய மெருகேற்றும் பணிகள் தொடங்கின.

சோனி நிறுவனம் இணையதளம், முன்னோட்டங்கள்.விடியோ கேம் என்று இதற்கான வணிகப்படுத்தல் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறது.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தக் கோடைக்கால கொண்டாட்டமாக ஜூனில் வெளிவரவுள்ளது. இதுவும் 3டி பரிமாணத்தில் புதுவித அனுபவமாக இருக்க போகிறது.

கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில் வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமான தியேட்டர்களில் விரைவில் வெளிவரவுள்ளது. 100க்கு மேற்ப்பட்ட நாடுகளில் வெளிவர உள்ளது. 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தியாவில் ஜூன் 29 இல் ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிறது .மற்ற நாடுகளில் ஜூலை 3 இல் ரிலீஸ் ஆகிறது

Comments